வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

திருப்புல்லாணி மாரியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம்

DIN | Published: 15th November 2018 01:19 AM

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகாசலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை அனுக்கை விக்னேசுவர பூஜை, காப்புக்கட்டுதல் ஆகியவற்றுடன் விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகளை பாபுசாஸ்திரிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். புதன்கிழமை அதிகாலையில் கோ பூஜை, யாத்ரா தானம், மகா பூர்ணாகுதி தீபாராதனை ஆகியன நடந்து முடிந்த பின் புனித நீர்க்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு ராஜகோபுரத்தை அடைந்தன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் கோபுரத்தில் புனிதநீரை ஊற்ற கும்பாபிஷேகம்  நடைபெற்றது. பின்னர் மூலவரான புல்லாணி மாரியம்மனுக்கும், உடனுறை பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மூலவர் புல்லாணி மாரியம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை திருப்புல்லாணி வடக்குத்தெரு, மேலத்தெரு, ஜெகன்நகர் பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். திருப்புல்லாணி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

More from the section

ராமநாதபுரம் எம்.பி.யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை


திருவாடானை அருகே துப்பாக்கிக் குண்டு  காயத்துடன் மயில் மீட்பு


பார்த்திபனூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு

திருப்பாச்சேத்தி, தொண்டியில் ஆவணங்களின்றி
காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.31 லட்சம் பறிமுதல்

கமுதி அருகே இருதரப்பினரிடையே மீண்டும் மோதல்