புதன்கிழமை 19 டிசம்பர் 2018

பாம்பன் ரயில் பாலத்தை திறக்கும் போது இரும்புக் கம்பி அறுந்து ஊழியர் பலத்த காயம்

DIN | Published: 15th November 2018 01:20 AM

பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள தூக்குப் பாலத்தை இயக்கிய போது இரும்புக் கம்பி அறுந்து தற்காலிக ஊழியர்  கடலில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில்பாலத்தின் தூக்குப் பாலம், செவ்வாய்க்கிழமை மாலை விசைப்படகுகள் செல்ல தினக்கூலி ஊழியர்களை கொண்டு திறக்கப்பட்டது. இதில் பாம்பன் 2 ஆம் ரயில்வே கேட் தெருவைச் சேர்ந்த ஜேசு (45)  தூக்கு பாலத்தை திறந்து கொண்டிருந்த போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. 
அப்போது இரும்பு கம்பி அறுந்து பின்புறமாக சுற்றியதால் மார்பு பகுதியில் கம்பி தாக்கி ஜேசு கடலில் தூக்கி வீசப்பட்டர். இதனையடுத்து சக ஊழியர்கள் கடலுக்குள் குதித்து ஜேசுவை மீட்டனர். இதில் ஜேசு மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஜேசுவின் உறவினர்கள் ரயில்வே காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
 

More from the section

விளங்குளத்தூரில் புதிய நிழற்கூடம் அமைக்கக் கோரிக்கை
பரமக்குடியில் கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் வைகையாறு
பள்ளி அருகே அபாய நிலையில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி
ராமநாதபுரத்தில் கடல் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்: மீனவர் குறைதீர் முகாம் நடத்த ஆட்சியர் ஒப்புதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம்