வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கமுதி அருகே சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN | Published: 12th September 2018 05:43 AM

கமுதி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டியில் உள்ள  அங்கன்வாடி மையத்தில் 18 குழந்தைகள் படித்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம்  கட்டப்பட்டது. 
தற்போது இந்த கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டத்திற்கு வெளியே அமர்ந்து, படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர்.  
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

More from the section

பரமக்குடி அருகே சாயிபாபா கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம்: 60 பேர் மருத்துவமனையில் அனுமதி
எஸ்.பி.பட்டினத்தில் 11 ஆம் நூற்றாண்டு சோழர் கால உறைகிணறு கண்டெடுப்பு
பரமக்குடியில் சிற்றுந்தில் சென்ற பெண்ணிடம் நகை திருடிய இருவர் போலீஸில் ஒப்படைப்பு
பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் மனு
ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் 30 சாலைகள் சீரமைப்பு: அதிகாரிகள் தகவல்