சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

திருவாடானையில் நெடுஞ்சாலையோரபள்ளத்தால் விபத்து அபாயம்

DIN | Published: 12th September 2018 05:46 AM

திருவாடானையில் நெடுஞ்சாலையோரம் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதற்காக தோண்டிய பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 திருவாடானை அருகே உள்ள பாரதிநகரில் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்றும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு அருகில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சில மாதங்களுக்கு முன்பு குழாய் உடைப்பை சரிசெய்ய  பள்ளம் தோண்டப்பட்டது.
 சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, பல நாள்களாகியும் இதுநாள் வரை பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 அதேபோல் திருவாடானை நான்கு முக்கு சந்திப்பு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, பல மாதங்களாக குடிநீர் வீணாகியது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் உடனடியாக குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. 
 ஆனால், அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை மூடப்படவில்லை. இச்சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். 
 எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மேற்கண்ட இரு இடங்களிலும் சாலையோரப் பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

More from the section

வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு
சக காவலரே வெளியிட்ட பொய்யான "ஆடியோ' காவலர் மீதான பணியிட மாறுதல் உத்தரவு ரத்து
மதுரையில் மதுபானக் கூடத்தில்  ஓட்டுநர் கொலை: முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் இளைஞர் சரண்


திருமணத்துக்கு மறுப்பு காதலர் மீது பெண் புகார்

ராமேசுவரம் சார் -பதிவாளர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர்அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள், பணம்  சிக்கின