புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,367 வாக்குச்சாவடி மையங்கள்

DIN | Published: 12th September 2018 05:43 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மறுசீரமைப்புக்குப் பிறகு, 1,367 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப்பேரைவத் தொகுதிகளில் மொத்தம் 1307 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்குப் பிறகு பரமக்குடியில் 1, திருவாடானையில் 25, ராமநாதபுரத்தில் 15, முதுகுளத்தூரில் 19 என 60 வாக்குச்சாவடி மையங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 
இதன்படி பரமக்குடியில் 302, திருவாடானையில் 346, ராமநாதபுரத்தில் 336, முதுகுளத்தூரில் 383 என மொத்தம் 1,367 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section


ஆழ்கடல் மீன் பிடி திட்டம்: முதல்முறையாக 4 படகுகள் வெள்ளோட்டம்

7 லட்சம் லிட்டர் குறைப்பு; குழாய் உடைப்பு: ராமநாதபுரத்தில் குடிநீர் விநியோகம் கடும் பாதிப்பு
மிளகாய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
ரெணபலி முருகன் கோயில் தேரோட்டம்
பரமக்குடி பள்ளியில் கலையருவிப் போட்டி