வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் மனு

DIN | Published: 19th February 2019 02:09 AM

குடிநீர் வசதி கோரி, எல்.கருங்குளம் கிராம மக்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.  
ராமநாதபுரம் ஒன்றியம், திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த எல்.கருங்குளம் கிராமம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதன் மாவட்ட துணைச் செயலர் எம். குமார், கிளைச் செயலர் கே. தமிழ்ச்செல்வி, செயற்குழு எம். ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட குடிநீர் நிறுத்தப்பட்டதாகவும், உத்திரகோசமங்கையில் உள்ள குடிநீர்த் தொட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கருங்குளத்துக்கு குடிநீர் கொண்டு வரும் குழாயானது மணல் திருட்டு கும்பலால் அவ்வப்போது சேதப்படுத்தப்படுகிறது.
மேலும், ஆழ்துளைக் கிணறு மூலம் பெறும் நீர் குடிக்க முடியாத நிலையில் இருப்பதால், இரும்புக் குழாய் மூலம் காவிரி கூட்டுக் குடிநீரை கிராமத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவும், கீழ்நிலைத் தொட்டி அமைத்து தண்ணீரைத் தேக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 

More from the section

ராமநாதபுரம் எம்.பி.யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை


திருவாடானை அருகே துப்பாக்கிக் குண்டு  காயத்துடன் மயில் மீட்பு


பார்த்திபனூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு

திருப்பாச்சேத்தி, தொண்டியில் ஆவணங்களின்றி
காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.31 லட்சம் பறிமுதல்

கமுதி அருகே இருதரப்பினரிடையே மீண்டும் மோதல்