திங்கள்கிழமை 25 மார்ச் 2019

பைக் மோதி முதியவர் சாவு

DIN | Published: 19th February 2019 02:11 AM

திருவாடானை தாலுகா, திருப்பாலைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவர்  உயிரிழந்தார்.
மேலசேந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த காந்தி (57) என்பவர், ஆவரேந்தல் கிராமத்தில் வசித்து வந்தார்.  இவரது  தந்தை குப்பமுத்து (75) ஞாயிற்றுக்கிழமை இரவு ஆவரேந்தல் கிராமத்துக்கு வந்துவிட்டு தனது ஊருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, ஆவரேந்தல் செங்கல் சூளை அருகே எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த காவனூரைச்  சேர்ந்த சேகர் என்பவர், முதியவர் மீது மோதிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதில், குப்பமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் காந்தி அளித்த புகாரின்பேரில், திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான சேகரை தேடி வருகின்றனர்.

More from the section

வாக்காளர் விழிப்புணர்வு தபால் தலை வெளியீடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும்: பாஜக வேட்பாளர் உறுதி
பாம்பன் சாலைப் பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வு
ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தயார் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்