புதன்கிழமை 20 மார்ச் 2019

ரயில் மோதி இளைஞர் சாவு

DIN | Published: 19th February 2019 02:10 AM

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ரயில் மோதி இளைஞர் உயிரிழந்தார்.  
ராமநாதபுரம் நகர் சக்கரக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை காலை தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இளைஞர் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்த ரயில்வே போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, மாவட்ட தலைமை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த ராமு மகன் குணசேகரன் (25) என்றும், அவர் அவர் சேது விரைவு ரயில் மோதி உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. 
இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா என, ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

சாயல்குடியில் கட்டட  ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.56 ஆயிரம் பறிமுதல்
ராமேசுவரம் மீனவர்களுக்கு 7 ஆவது முறையாக இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
தொண்டி அருகே தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு
குடிநீரின்றி 10 ஆண்டுகளாக அவதி: ராமநாதபுரம் ஆட்சியரிடம் 4 கிராம மக்கள் மனு
மண்டபம் அருகே செங்கல் லாரி-வேன் மோதல்: அண்ணன், தம்பி சாவு