சனிக்கிழமை 23 மார்ச் 2019

ராமேசுவரம் கோயிலில் பிப்.25 இல் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

DIN | Published: 19th February 2019 02:08 AM

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்ரவரி 25 ஆம் தேதி (திங்கள்கிழமை) மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரி,  மார்ச் 5 இல் சுவாமி-அம்பாள் தேரோட்டம், மார்ச் 6 இல் மாசி மகா அமாவாசையையொட்டி பிற்பகல் 1.35 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்கினி தீர்த்தக் கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
இதனால், அன்றைய தினம் பிற்பகல் 1.35 மணி முதல் கோயில் நடை அடைக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என, கோயில் இணை ஆணையர் கோ.செ. மங்கையர்க்கரசி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்


தொண்டி பகுதியில்  தேர்தல் விதிமீறல்: விளம்பர பதாகை வைத்த 2 பேர் கைது

மக்களவைத் தேர்தல்:  நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு அனுமதி மறுப்பு
திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் கோயில் தேரோட்டம்