திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்

DIN | Published: 12th September 2018 05:47 AM

குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை  அரசு "இ-சேவை'  மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி அரசு "இ-சேவை' மையங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. 
இதனால் சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்காக விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செல்லத் தேவையில்லை. 
அண்மையில் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு "இ-சேவை' மையங்களில் தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


 

More from the section

கண்டுப்பட்டியில் மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரர்கள் 69 பேர் காயம்
திருமங்கலம் பகுதியில் இரு வேறு விபத்துகளில் 2 சிறுமிகள் சாவு
இளைஞர்கள் கல்வி கற்பதன் மூலம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்
இளையான்குடியில் ஜன.24-இல் தொழில்திறன் பயிலரங்கம்
காரைக்குடியில் சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை