சனிக்கிழமை 19 ஜனவரி 2019

  திருப்பத்தூர் கல்லூரியில் பொருளியல் மன்ற சிறப்புக் கூட்டம்

DIN | Published: 12th September 2018 05:48 AM

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் பொருளியல் மன்றத்தின் சார்பாக மாணவ, மாணவியருக்கு சிறப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் உயர் கல்வி நிறுவனங்களில் தர மேம்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். பொருளியல் துறைத் தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓமன் நாட்டின் வால்ஜாட் கல்லூரியின் இணைப் பேராசிரியர் ஏ.பிரகாஷ், உயர் கல்வி நிறுவனங்களின் தரமேம்பாடு கடைப்பிடிக்கும் முறைகள் மற்றும் அதன் அவசியம் பற்றி விளக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து சாதனை புரிந்த மாணவர் அஜீத்பாண்டியன், ஆராய்ச்சி மாணவர் அமோஸ் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். 
மேலும் கல்லூரியின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பேராசிரியர் என். ஸ்ரீதேவி, டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர் மஞ்சுளா மற்றும் சுதந்திரதின அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படையின் கேப்டன் கே.ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். 
 விழா ஏற்பாடுகளை கல்லூரி பொருளியல் மன்றத்தின் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் எம்.விஜயா, பி.சசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

More from the section

மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா
மானாமதுரையில் வழிப்பறி முயற்சி 2 பேருக்கு கத்திக்குத்து
பேருந்து வசதி செய்து தரக் கோரி காளையார்கோவில் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
கண்டுப்பட்டியில் நாளை மஞ்சுவிரட்டு
மானாமதுரை, கமுதியில் பொங்கல் விழா