24 மார்ச் 2019

கல்லல் ஸ்ரீசோமசுந்தரேசுவரர் கோயில் மாசிமகத் தேரோட்டம்

DIN | Published: 19th February 2019 02:16 AM

காரைக்குடி அருகே கல்லலில் அமைந்துள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத சோமசுந்தரேசுவரர் கோயில் மாசி மகத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் மாசி மகத் திருவிழா பிப்ரவரி 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து, தினந்தோறும் சுவாமி, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 
முக்கிய விழாவான தேரோட்டத்தையொட்டி, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சுவாமி, அம்மன் தனித் தேரில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். 
மாலை 4.35 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கத் தேரோட்டம் தொடங்கியது. தேர் கோயிலை வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
செவ்வாய்க்கிழமை (பிப்.19) காலை 11 மணியளவில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள், விழாக் குழுவினர் செய்திருந்தனர். காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

More from the section

மாரநாடு ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா
வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்டம்
தேர்தல் பணி: கர்ப்பிணிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுகோள்
வேலை உறுதித் திட்டம்: ப.சிதம்பரத்தின் பிரசாரம் பொய்யாகிவிட்டது
பள்ளிப் பேருந்தில் கூட்ட நெரிசல்: 3 மாணவிகள் மயக்கம்