வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

காரைக்குடியில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் போராட்டம்

DIN | Published: 19th February 2019 02:41 AM

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4-ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கக் கோரி, காரைக்குடியில் அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய காரைக்குடி தொலைத் தொடர்பு மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
இதையொட்டி, இம்மாவட்டங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் தொலைபேசி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதில், 98 சதவீதம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தை, சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர்கள் பூமிநாதன், யுவராஜ், மாரி, தமிழ்மாறன், கிருஷ்ணசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், வாடிக்களையாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன

More from the section

தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்
மானாமதுரையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம்


"மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடே வரும் தேர்தலில் வெற்றியை பெற்றுத் தரும்'

"தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர கம்பன் அரங்குகளை 
நோக்கி இளைஞர்கள் வரவேண்டும்'

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்