சனிக்கிழமை 23 மார்ச் 2019

திருக்கோஷ்டியூரில் இன்று மாசித் தெப்ப உற்சவம்

DIN | Published: 19th February 2019 02:40 AM

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்ப உற்சவ விழா செவ்வாய்க்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது.
இக்கோயிலில் மாசித் தெப்ப உற்சவ விழா கடந்த 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், திங்கள்கிழமை காலை வெண்ணெய்த் தாழி சேவையில் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர், காலை 10.06 முதல் 11.26 மணிக்குள் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில், சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் 10 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தெப்பத் திருநாளை யொட்டி, காலை 6.10 முதல் 6.30 மணிக்குள் தங்கத் தோளிக்கினியானில் சுவாமி திருவீதி புறப்பாடாகி,  சோசியர் குளத்தில் பகல் 11 முதல் 11.30 மணிக்குள் பகல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு 10 மணிக்கு தெப்ப மண்டபத்திலிருந்து சுவாமி புறப்பாடாகி, தெப்பத்தில் எழுந்தருளி இரவு 10 மணிக்கு மேல் தெப்பம் கண்டருளல் நடைபெற உள்ளது. 
விழா நிறைவு நாளான புதன்கிழமை காலை சோசியர் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று, பின்னர் தங்கத்தோளுக்கினியானில் சுவாமி ஆஸ்தானத்துக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.
 

More from the section


கட்டிக்குளம் ராமலிங்க  சுவாமிகள் கோயில் தேரோட்டம்

திருப்பத்தூர், சாயல்குடி பகுதிகளில் சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்: அமமுக பிரமுகரிடம் ரூ.40 ஆயிரம் சிக்கியது
தாயமங்கலம் கோயில் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
காரைக்குடி கம்பன் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி