24 மார்ச் 2019

தேவகோட்டையில் குதிரை வண்டி பந்தயம்

DIN | Published: 19th February 2019 02:40 AM

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தண்ணீர்வயல் சா.முத்துமாணிக்கம் அம்பலம் என்பவரின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் 2 ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, குதிரை வண்டி பந்தயம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
குதிரை வண்டிப் பந்தயமானது, கண்டதேவி தேரோடும் வீதியை 10 முறை சுற்றி வரவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இதில், 9 குதிரை வண்டிகள் கலந்துகொண்டன. முதலிடத்தை காளையார்கோவில் வண்டியும், இரண்டாம் இடத்தை தேனி வண்டியும், மூன்றாம் இடத்தை ஈரோடு பவானி வண்டியும் வென்றன.     
இப்போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, தேவகோட்டை வேலுநாச்சியார் குதிரை வண்டி பந்தயக் குழு செய்திருந்தனர்.
 

More from the section

மாரநாடு ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா
வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்டம்
தேர்தல் பணி: கர்ப்பிணிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுகோள்
வேலை உறுதித் திட்டம்: ப.சிதம்பரத்தின் பிரசாரம் பொய்யாகிவிட்டது
பள்ளிப் பேருந்தில் கூட்ட நெரிசல்: 3 மாணவிகள் மயக்கம்