வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்  

DIN | Published: 19th February 2019 02:39 AM

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஸ்ரீசோமசுந்தரர் செளந்தர நாயகி அம்மன், குன்னமாகாளியம்மன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இப்பந்தயத்தில், பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முதலிடம் பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டன. போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள்  கலந்துகொண்டன.
 

More from the section


கால்வாய்க்குள் தவறி விழுந்து பாய் வியாபாரி சாவு

காளையார்கோவில் அருகே பெண் மர்மச் சாவு


"மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள் குறித்தே பிரசாரம் செய்வோம்'

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்
மண்டல அலுவலர்களுக்கானதேர்தல் விதிமுறைகள் குறித்த பயிற்சி