24 மார்ச் 2019

மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத் திருவிழா தேரோட்டம்

DIN | Published: 19th February 2019 02:39 AM

நகரத்தார்களின் 9 கோயில்களில் ஒன்றான காரைக்குடி அருகேயுள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழா,  இந்தாண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு, சுவாமி-
அம்மன் தனித்தனி குதிரை வாகனத்தில் எழுந்தருளினர். 
திருவிழாவின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டத்தையொட்டி, காலை 9 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். மாலையில் நகரத்தார்கள், பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கத் தேரோட்டம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை (பிப். 19) காலை 8 முதல் 9 மணி வரை தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7 முதல் 8 மணி வரை சப்தாவரணமும் நடைபெறுகிறது. புதன்கிழமை (பிப். 20) காலையில் உற்சவ சாந்தி நடைபெற்று, திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, மாத்தூர் கோயில் நகரத்தார்கள் செய்து வருகின்றனர்.

More from the section

மாரநாடு ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா
வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்டம்
தேர்தல் பணி: கர்ப்பிணிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுகோள்
வேலை உறுதித் திட்டம்: ப.சிதம்பரத்தின் பிரசாரம் பொய்யாகிவிட்டது
பள்ளிப் பேருந்தில் கூட்ட நெரிசல்: 3 மாணவிகள் மயக்கம்