புதன்கிழமை 16 ஜனவரி 2019

அண்ணா பல்கலை. மண்டல கூடைப்பந்து: கரூர் பொறியியல் கல்லூரி முதலிடம்

DIN | Published: 12th September 2018 05:31 AM

தேனியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அண்ணா பல்கலை கழக மண்டல அளவிலான கூடைப் பந்து போட்டியில், கரூர் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. 
 தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை போட்டிகள் நடைபெற்றன. தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 15 பொறியியல் கல்லூரி அணிகள் போட்டியில் பங்கேற்றன. அரை இறுதிப் போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல்  கல்லூரி மற்றும் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணிகள், கரூர் எம்.குமராசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற கரூர் எம்.குமாரசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. 
இதில் 45-க்கு 26 என்ற புள்ளிக்கணக்கில் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,பொறியியல் கல்லூரி அணி 2-ஆம் இடமும், தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி 3-ஆம் இடமும் பெற்றன.
 

More from the section


போடி அருகே அரசு குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து

பால் வியாபாரி வீட்டுக் கதவை உடைத்து 35 பவுன் நகைகள் திருட்டு
தேனியில் களைகட்டிய சந்தை
பெண்ணிடம் நகை பறிப்பு
ஆண்டிபட்டியில் 14 ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்