புதன்கிழமை 16 ஜனவரி 2019

கம்பத்தில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு-சாலை மறியல்

DIN | Published: 12th September 2018 05:35 AM

 தேனி மாவட்டம்  கம்பத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டி, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு, இப்பகுதியில் குடியிருந்து வரும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுத்தனர். 
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், செவ்வாய்க்கிழமை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து புதிய பேருந்து நிலையம்  செல்லும் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். கம்பம் வடக்கு சார்பு ஆய்வாளர்  ஜெய்கணேஷ் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடியிருப்பு பகுதிக்குள் கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டோம்,  கடைகளை திறக்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும்,  இல்லையென்றால் மீண்டும் போராட்டம்  நடத்துவோம் எனக்கூறி கலைந்து சென்றனர்.

More from the section


போடி அருகே அரசு குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து

பால் வியாபாரி வீட்டுக் கதவை உடைத்து 35 பவுன் நகைகள் திருட்டு
தேனியில் களைகட்டிய சந்தை
பெண்ணிடம் நகை பறிப்பு
ஊராட்சிகளில் சுகாதாரப் பொங்கல்