20 ஜனவரி 2019

தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் 8 வகை புதிய தும்பி பூச்சிகள் கண்டுபிடிப்பு

DIN | Published: 12th September 2018 05:36 AM

தேக்கடி பெரியாறு  புலிகள் காப்பகத்தில் இரண்டாம் முறையாக நடைபெற்ற தும்பிகள் கணக்கெடுப்பில் புதிய 8 வகையான தும்பி பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தேனி மாவட்ட எல்லை அருகில் குமுளி, தேக்கடி பகுதியில் உள்ளது பெரியாறு புலிகள் காப்பகம். இங்கு கடந்த ஆண்டு முதன் முறையாக திருவனந்தபுரம், "இண்டியன் ட்ராகன் ப்ளை சொசைட்டி", மற்றும் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகம் இணைந்து தும்பிகள் கணக்கெடுப்பு நடத்தியது.  இதில் 80 வகை தும்பியினங்கள் புலிகள் காப்பக வனத்திற்குள் இருப்பது கண்டறியப்பட்டது. 
இதில் இண்டியன் எமரால்ட், ஃபால்ஸ் ஸ்ப்ரெட்விங், சஃப்ரான் ரீட் டைல், ராபிட் டைல்ட் ஹாக்லெட் ஆகிய அரியவகை தும்பியினங்களும் இருந்தன. இரண்டாம் முறையாக தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் அருவி ஓடை, மூழிக்கல், குமரிகுளம் உள்பட்ட 17 இடங்களில் நீரோட்டமுள்ள, உயரமான பகுதிகளில் கடந்த 3 நாள்கள் நடைபெற்ற  தும்பிகள் கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. 
 இதில் தும்பிகள் குறித்து ஆய்வுகள் பல மேற்கொண்ட நிபுணர்கள், புலிகள் காப்பக பணியாளர்கள், பாதுகாவலர்கள் இடம் பெற்றிருந்தனர். இம்முறை நடந்த கணெக்கெடுப்பில், இக்குழுவினர் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு, 88 வகை தும்பியினங்கள் புலிகள் காப்பக வனத்திற்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆய்வில் 80 இனங்களாக இருந்த தும்பிகளின் எண்ணிக்கை தற்போது 88 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை ஹைட்ரோ பேசிலஸ் குரோக்கஸ், வெஸ்டாலிஸ் சப்மோன்டனா உள்பட எட்டு புதிய தும்பி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.


 

More from the section

தேனியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் குழு ஆய்வு
போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது
தேனியில் ஜீப் மோதி பழ வியாபாரி சாவு
விவசாயி தூக்கிட்டு தற்கொலை
ஆண்டிபட்டி பேருந்து நிலைய வணிக வளாக மேற்கூரையில் வளரும் மரத்தால் அபாயம்