வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சின்னமனூர் அருகே பைக் மீது வேன் மோதல்: 2 பேர் சாவு

DIN | Published: 19th February 2019 07:02 AM

சின்னமனூர் அருகே கருப்பத்தேவன்பட்டியில் இருசக்கர வாகனம்  மீது வேன் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 பேர் உயிரிழந்தனர்.
   சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் வைரவன் (19). இவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த முப்புளியான் மகன் மாதவன் (19), சின்னமணி மகன் அபிமன்யு (19). இவர்கள் அண்ணாநகர்-கருப்பத்தேவன்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனத்தை வைரவன் ஓட்டிச் சென்றுள்ளார்.
   அப்போது எதிர் திசையில் இருந்து வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த காட்டுராஜா மகன் ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற வைரவன், மாதவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அபிமன்யு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

More from the section

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியால் நன்மை இல்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தேனியில் சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் வேட்பாளர் மனு தாக்கல்
தேர்தல் அலுவலர்களுக்கு மார்ச் 24-இல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
பங்குனி உத்திர திருவிழா: போடி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
பெரியகுளத்தில் நாளை மாவட்ட  கூடைப்பந்தாட்ட  அணி வீரர்கள் தேர்வு