சனிக்கிழமை 23 மார்ச் 2019

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கூலி தொழிலாளி நிதி உதவி

DIN | Published: 19th February 2019 07:04 AM

தேனி அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1,000 நிதி உதவியை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் வழங்கினார்.
  லட்சுமிபுரம்- சருத்துப்பட்டி, எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் பொன்னையன் (75). இவரது மனைவி கம்மாளச்சி. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. பொன்னையன், கம்மாளச்சி ஆகியோர் விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர்-புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்த செய்தியை பொன்னையன் வானொலியில் கேட்டுள்ளார். 
இதையடுத்து அவரும், அவரது மனைவியும் தங்களது உழைப்பின் மூலம் சேமித்து வைத்திருந்த ரூ.1,000-ஐ, பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்தனர். இதன்படி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில்,  அந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூ.1,000-ஐ ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் பொன்னையன் வழங்கினார்.

More from the section

தேனி அருகே ரூ.60 லட்சம் பறிமுதல்
ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் புதிய பாசனத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு 135 இடங்கள் நிர்ணயம்
ஆண்டிபட்டி அ.ம.மு.க வேட்பாளர்: ரா.ஜெயக்குமார் சுயவிவரம்
தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சுயவிவரம்