வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

தேனியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

DIN | Published: 19th February 2019 07:02 AM

தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  தேனி, ஆர்.சி. பள்ளி வளாகத்தில் இருந்து ஊர்வலத்தை ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலால் துறை உதவி ஆணையர் ராஜா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அரசு விடுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதுரை, பெரியகுளம் சாலை வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

More from the section

பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு செய்து  தேனி அதிமுக வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்
இரண்டாவது இடைத்தேர்தலை சந்திக்கும் ஆண்டிபட்டி தொகுதி
கம்பம், ஆண்டிபட்டி பகுதியில் ரூ. 5 லட்சம் பறிமுதல்
தேர்தல் விதிமீறல்: அதிமுக,  கூட்டணி கட்சியினர் மீது வழக்கு
கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தம்பதி சாவு