சனிக்கிழமை 23 மார்ச் 2019

கௌரவ ஊக்கத் தொகை பெற பிப். 27-க்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN | Published: 23rd February 2019 12:23 AM

தேனி மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் இடம் பெறாத விவசாயிகள், பிப்.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கான பயனாளிகள் பட்டியல் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. 
5 ஏக்கருக்கும் கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கு தங்களது நிலத்தின் பட்டா,  குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புத்தக முதல் பக்க நகல் மற்றும் செல்லிடப்பேசி எண்ணுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம்,  வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைப் பிரிவு அலுவலகத்தில் பிப்.27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

தேனி அருகே ரூ.60 லட்சம் பறிமுதல்
ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் புதிய பாசனத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு 135 இடங்கள் நிர்ணயம்
ஆண்டிபட்டி அ.ம.மு.க வேட்பாளர்: ரா.ஜெயக்குமார் சுயவிவரம்
தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சுயவிவரம்