24 மார்ச் 2019

தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

DIN | Published: 23rd February 2019 12:24 AM

தேனியில் கடன் தொகையை திரும்பத் தருமாறு கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
   பழனிசெட்டிபட்டி, தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி முத்துமாரி (25). இவருக்கு பழனிசெட்டிபட்டி, லட்சுமிநகரைச் சேர்ந்த நாகராஜ் (30), ராஜா (47), பாலபிரபாகரன் (27), அரண்மனைப்புதூர் முல்லைநகரைச் சேர்ந்த ரமேஷ் (40) ஆகியோர் தனித் தனியே மொத்தம் ரூ.12 லட்சம் கடன் கொடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
   இந்தக் கடன் தொகையை திரும்பத் தருவதில் ஏற்பட்ட பிரச்னையில் நாகராஜ் உள்ளிட்ட 4 பேரும் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தேனி காவல் நிலையத்தில் முத்துமாரி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நாகராஜ் உள்ளிட்ட 4 பேர் மீதும் தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து நாகராஜ், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜா, பாலபிரபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

More from the section

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 
தேனியில் சமுதாய வாக்கு வங்கியை குறி வைத்து களம் இறங்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஆண்டிபட்டியில் காரில் கொண்டு சென்ற ரூ.2.30 லட்சம் பறிமுதல்
கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வனவிலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்