வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பெரியகுளம் அருகே வனப்பகுதியில் தீ

DIN | Published: 23rd February 2019 12:23 AM

பெரியகுளம் அருகே ஊரடி, ஊத்துக்காடு பகுதிகளில் வியாழக்கிழமை முதல் பற்றி எரியும் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
   பெரியகுளம் அருகே அகமலை, சின்னூர், பெரியூர்,அலங்காரம் என 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன் அகமலைப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஊரடி , ஊத்துக்காடு பகுதியில் தனியார் நிலங்களில் தீ வைத்துள்ளனர். அது மளமளவென பற்றி வனப்பகுதிக்கும் பரவியது. இதுபள்ளமான பகுதி என்பதால் வனத்துறையினர் கயிற்றின் மூலம் கீழே இறங்கி தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
 

More from the section

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியால் நன்மை இல்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தேனியில் சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் வேட்பாளர் மனு தாக்கல்
தேர்தல் அலுவலர்களுக்கு மார்ச் 24-இல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
பங்குனி உத்திர திருவிழா: போடி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
பெரியகுளத்தில் நாளை மாவட்ட  கூடைப்பந்தாட்ட  அணி வீரர்கள் தேர்வு