சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா: அனைத்துக் கட்சி தலைவர்கள் சிலைக்கு மாலை

DIN | Published: 22nd January 2019 08:11 AM

மன்னர் திருமலை நாயக்கரின் 436 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை ஆண்டிபட்டியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    அதிமுக சார்பில் ஒன்றியச் செயலர் லோகிராஜன் தலைமையில், நகரச் செயலர் முத்துவெங்கட்ராமன், மாவட்டப் பிரதிநிதி கவிராஜன் உள்பட அக்கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
     அ.ம.மு.க. சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலர் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமையில், மருத்துவர் அணி செயலர் கதிர்காமு மற்றும் ஒன்றியச் செயலர் ஜெயக்குமார் முன்னிலையில், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.   
     திமுக சார்பில் ஒன்றியப் பொறுப்பாளர் மகாராஜன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். மதிமுக சார்பில் மாவட்டச் செயலர் சந்திரன் தலைமையில் ஒன்றியச் செயலர் வெங்கட்ராமன் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது.  தேமுதிக சார்பில் மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகி வேல்முருகன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.
    விழா ஏற்பாடுகளை, ஆண்டிபட்டி வட்டார நாயுடு மகாஜன சங்கம் சார்பில், அதன் கௌரவத் தலைவர் சுப்புராஜ் தலைமையில், வட்டார துணைத் தலைலர் சௌந்திரராஜன், வட்டாரச் செயலர் எஸ்.எம். ராஜா, நகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    விழாவில், மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த அச்சமுதாயத்தினர்  பங்கேற்றனர்.

More from the section

தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி


பெரியகுளம் அருகே வனப்பகுதியில் தீ

கௌரவ ஊக்கத் தொகை பெற பிப். 27-க்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
பல்லவராயன்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு: ஆட்சியர் ஆய்வு