சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

48 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN | Published: 22nd January 2019 08:11 AM

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
     உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, வாய்க்கால்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சட்டத்துக்கு விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. 
அதன்பேரில், அப்பகுதியில் ரோந்து சென்ற உத்தமபாளையம் போலீஸார், கோகிலாபுரத்தில் சின்னத்தம்பி (45) என்பவர் சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர். 
பெரியகுளம்:    தேவதானப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மயானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த வாசாமணி (45) என்றும், அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர்.

More from the section

தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி


பெரியகுளம் அருகே வனப்பகுதியில் தீ

கௌரவ ஊக்கத் தொகை பெற பிப். 27-க்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
பல்லவராயன்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு: ஆட்சியர் ஆய்வு