21 ஏப்ரல் 2019

பெரியகுளத்தில் நாளை மாவட்ட  கூடைப்பந்தாட்ட  அணி வீரர்கள் தேர்வு

DIN | Published: 22nd March 2019 07:06 AM

தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையிலான 18 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டிக்கு, தேனி மாவட்ட ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தின் தேனி மாவட்டத் தலைவர் பி.சி. சிதம்பரசூரியவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறும் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க, தேனி மாவட்ட  ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு பெரியகுளம் பிஎஸ்டி விளையாட்டு அரங்கில் மார்ச் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், உரிய சான்றுகளுடன் வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

More from the section

வருசநாடு வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது
ஆண்டிபட்டி பகுதிகளில் மாமரங்களில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
உத்தமபாளையம் அருகே மனைவி, மாமியார் வெட்டிக் கொலை: தொழிலாளி கைது
ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம்
கம்பத்தில் புகையிலை பொருள்கள் விற்றவர் கைது