திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்துகள் அதிகரிப்பு

DIN | Published: 10th December 2018 05:18 AM

சாத்தூர் அருகே தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-தாயில்பட்டி செல்லும் சாலையில் சுப்பிரமணியாபுரம் தனியார் கல்லூரி அருகே தரைப் பாலம் உள்ளது. இந்த தரைப் பாலத்தை கடந்துதான் தினமும் பட்டாசுத் தொழிற்சாலைக்கு வாகனங்கள் மற்றும் இப்பகுதி கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரவேண்டும். தினமும், இச்சாலையில் 800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவரும் நிலையில், தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததாலும், தெரு விளக்குகள் இல்லாததாலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
    எனவே, தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைத்து, அப்பகுதியில் தெரு விளக்குகளையும் ஏற்படுத்தி, விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from the section


ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வனப் பேச்சியம்மன் கோயில் திருவிழா

சத்திரபுளியங்குளம் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
சிவகாசியில் 2 ஆவது நாளாக கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு


முகவரி இல்லாத 40 ஆயிரம் தபால்களை வழங்க அஞ்சல் ஊழியர்கள் எதிர்ப்பு