செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

சுக்கிலநத்தம் கிராமத்தில் பேருந்து நிழற்குடை சேதம்

DIN | Published: 12th September 2018 05:39 AM

அருப்புக்கோட்டை வட்டம், சுக்கிலநத்தம் கிராமத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
       சுக்கிலநத்தம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடம் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால், உள்பகுதியில் சிமென்டால் கட்டப்பட்ட இருக்கைகளும், காங்கிரீட் மேற்கூரையும் சேதமடைந்துள்ளன. மேலும்,  மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், யாரும் இதனுள் செல்வதில்லை. 
    எனவே, இந்த நிழற்குடை கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய நிழற்குடையோ அல்லது இதை சீரமைத்தோ தரவேண்டும் என, இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

More from the section

அரசுப் பேருந்து மோதி பைக்கில் சென்றவர் சாவு
ராஜபாளையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் சாவு
சாத்தூர் அருகே தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை


விருதுநகரில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய உழவர் சந்தை

விருதுநகரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மந்தம்: பொதுமக்கள் அவதி