புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

விபத்தில் உயிரிழந்த திமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

DIN | Published: 12th September 2018 05:39 AM

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, சென்னையிலிருந்து காரில் திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த வீரசோழன் பகுதி திமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியை, திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளராக இருந்தார். திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, அஞ்சலி செலுத்துவதற்காக மணிவண்ணன் கட்சியினர் சிலருடன் காரில் சென்னை சென்றார். 
பின்னர், அங்கிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, விழுப்புரம் அருகே ஏற்பட்ட விபத்தில் மணிவண்ணன் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் சென்னையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பினர்.
 இந்நிலையில், உயிரிழந்த மணிவண்ணன் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், அதற்கான காசோலையை, மணிவண்ணன் குடும்பத்தினரிடம் வடக்கு மாவட்டச் செயலரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
இதேபோல், நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் முனியசாமி என்பவர், கருணாநிதி காலமான செய்தி கேட்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரூ. 2 லட்சம் நிதியுதவியை தங்கம் தென்னரசு வழங்கினார். 
அப்போது, ஒன்றியச் செயலர்கள் கண்ணன், போஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

More from the section

விருதுநகரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

"மக்களவைத் தேர்தல்: பழைய குற்றவாளிகளை 
கைது செய்ய நடவடிக்கை'

அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
சாத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மகம் திருவிழா
ஸ்ரீவிலி.யில் காங்கிரஸ் கட்சியின் "சக்தி' திட்ட முகாம்