வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

அருப்புக்கோட்டை கல்லூரியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மலரஞ்சலி

DIN | Published: 19th February 2019 06:35 AM

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக  உறுப்புக் கலைக் கல்லூரி சார்பில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் அழகுச்செல்வம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாணவிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் 3 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இதில் பேராசிரியர்கள் ஞானேஸ்வரன், தனசேகர், ராஜமோகன், உடற்கல்வி ஆசிரியர் பூபதிராஜன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

More from the section

விருதுநகர் அருகே லாரி மீது கார் மோதி கணவன், மனைவி சாவு
தனித்திறன் போட்டிகளில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
விவசாயிகள் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்கக் கூடாது: மீன்வள உதவி இயக்குநர் அறிவுறுத்தல்
மறவர்பெருங்குடியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை
அதிமுக வேட்பாளர் சாத்தூரில் வாக்கு சேகரிப்பு