திங்கள்கிழமை 25 மார்ச் 2019

பல்கலை. அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

DIN | Published: 19th February 2019 06:35 AM

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கடந்த 2018-ஆம் கல்வி ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வில், வி.பி.எம்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை உயிர் வேதியியல் துறையில் பயிலும் மாணவி  அபிநயா பழனிகோமதி பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் வணிகவியல் துறையைச் சேர்ந்த எம்.திவ்யதர்ஷினி, முதுகலை வணிகவியல் துறை மாணவி ஐந்தாம் இடத்தையும், முதுகலை வணிக மேலாண்மை துறை மாணவி ஜெ.நிகிலா கிருஷ்ணபிரியா இரண்டாம் இடத்தையும், எம்.ஆர்.ஜனனி மூன்றாம் இடத்தையும், ஜி.கனகதீபா நான்காம் இடத்தையும் பிடித்தனர்.
 இவர்களை கல்லூரியின் தலைவர் வி.பி.எம்.எம்.சங்கர், கல்லூரியின் தாளாளர் பழனிசெல்வி சங்கர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் கல்லூரியின் கல்வி இயக்குநர் டாக்டர் ரா.சபரிமாலா, கல்லூரி முதல்வர் செந்தாமரைச்செல்வி, துறைத் தலைவர்கள் முத்துலட்சுமி, ராஜ்குமார் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

மத்தியில் அமையும் ஆட்சியில் திமுக பங்கேற்கும்:  வைகோ
காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை: எஸ்.பி. காரை உறவினர்கள் முற்றுகை
கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
சிவகாசி பொறியியல் கல்லூரியில் ரூ.1.18 கோடி கல்வி உதவித் தொகை வழங்கல்
அரசுக் கல்லூரியில் பழுதடைந்த கழிப்பறையை சீரமைக்க வலியுறுத்தல்