21 ஏப்ரல் 2019

சாத்தூர் அதிமுக வேட்பாளர், விருதுநகர் தேமுதிக  வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பிரசாரம்

DIN | Published: 21st March 2019 07:06 AM

அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சாத்தூர் தொகுதியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர், கட்சி அலுவலகத்தை  திறந்து வைத்தார்.
சாத்தூரில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்  அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ராஜவர்மன் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில்  அக்கட்சியினர் புதன்கிழமை பிரசாரம் செய்தனர். ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஒ.மேட்டுபட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சாத்தூர் நகர் பகுதியில் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் உருவப்படம் மற்றும் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேர்தலை முன்னிட்டு நடராஜா தியேட்டரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் சந்திரபிரபா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதில் அதிமுக நகரச் செயலாளர் வாசன்டெய்சிராணி, ஒன்றியச் செயலாளர்கள் சண்முககனி, தேவதுரை, மாநில பொதுக் குழு உறுப்பினர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ராஜபாளையம் அருகே சாத்தூர் தொகுதிக்கு உள்பட்ட ஆசிலா புரத்தில் உள்ள வண்டி மாகாளி அம்மனைத் தரிசனம் செய்து அப்பகுதியில் அமைச்சர் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:  ஸ்ரீவில்லிபுத்தூர் வழிவிடு முருகன் கோயிலில் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி ஆகியோருடன் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினார். 
 

More from the section

ஆனைக்குட்டம் அணை வறண்டதால் விருதுநகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்
திருச்சுழியில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு
விருதுநகர் அருகே பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்
சாத்தூர் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
ராஜபாளையத்தில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்