21 ஏப்ரல் 2019

சிவகாசி சட்டப் பேரவை தொகுதியில் 276 வாக்குச் சாவடிகள்

DIN | Published: 21st March 2019 07:06 AM

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் 276 வாக்குச் சாவடிகள் உள்ளன என வருவாய்க் கோட்டாட்சியர் தினகரன் தெரிவித்தார். 
இது தொடர்பாக அவர் புதன்கிழமை மேலும் கூறியதாவது: 
சிவகாசி வட்டப் பகுதியில் 158 வாக்குச் சாவடிகளும், சிவகாசி நகராட்சிப் பகுதியில் 63 வாக்குச்சாவடிகளும், திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் 55 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் சிவகாசி சட்டப் பேரவைத்தொகுதியில் 276 வாக்குச் சாவடிகள் உள்ளன.
சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில்  ஆண் வாக்களர்கள் 1,17,253 பேரும், பெண் வாக்காளர்கள் 1,23,401 பேரும் இதர இனத்தவர்கள் 22 பேரும் என மொத்தம் 2,40,676 வாக்காளர்கள் உள்ளனர்.
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றார்.

More from the section

திருச்சுழியில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு
விருதுநகர் அருகே பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்
ஆனைக்குட்டம் அணை வறண்டதால் விருதுநகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்
சாத்தூர் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
ராஜபாளையத்தில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்