24 பிப்ரவரி 2019

டெங்கு காய்ச்சலை தடுக்க நலவழித்துறையினர் ஆலோசனை

DIN | Published: 12th September 2018 06:44 AM

டெங்கு காய்ச்சலை தடுக்க காரைக்கால் நலவழித்துறை நிர்வாகம் பல்வேறு யோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பகலில் பலரை, பலமுறை கடிக்கும். டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமல் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வோடும், சுகாதாரத்தோடும் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வீடுகளைச் சுற்றி சிறு சிறு நீர் தேக்கங்களில், நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும்  தண்ணீர் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். தேவையற்ற பாத்திரங்களை கவிழ்த்து வைக்க வேண்டும். தேவையற்றப் பொருள்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தேவையற்ற டயர், டீ கப், தேங்காய் ஓடு, உரல், நீர் தொட்டிகள் ஆகியவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி மற்றும் வாந்தி, உடல் சோர்வு இருந்தால் அது டெங்குவாக இருக்கலாம்.
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from the section

விடையாற்றி உத்ஸவம்: புஷ்ப பல்லக்கில் நித்யகல்யாணப் பெருமாள் வீதியுலா
அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் குரங்குகளைப் பிடிக்க கூண்டு வைப்பு
மத்திய சிவில் சர்வீஸஸ் விதிகள் குறித்து என்.ஐ.டி.யில் கருத்தரங்கம்
ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் காயம்
சுகாதாரக் கல்வி பட்டமேற்படிப்பு மையத்தில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்