வியாழக்கிழமை 21 மார்ச் 2019

வேதாரண்யத்தில் தொடர் மழையால் மீட்புப் பணிகள் பாதிப்பு: வீடுகளை இழந்த மக்கள் அவதி

DIN | Published: 21st November 2018 09:58 AM

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்து கனமழை பெய்யத் தொடங்கியதால், மீட்புப் பணி பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் அவதியடைந்து வருகின்றனர். 
வேதாரண்யம் பகுதி மக்கள் கஜா புயலால் ஏற்கெனவே வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டு முகாம்களில் இருந்து வருகின்றனர். புயலுக்குப் பின் மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வீடுகளை இழந்து முகாம்களில் இருந்து வரும் மக்கள் போதிய அடிப்படை வசதியின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சமையல் செய்யவும், தங்கி இருக்கவும் போதிய இடவசதி இன்றி அவதியடைந்து வருகின்றனர். சாலைகளிலும், பேருந்து பயணியர் நிறுத்தகங்களிலும் தற்காலிக அடுப்புகளை அமைத்து சமையல் செய்தனர். சமையல் எரிவாயு உருளைகள் இல்லாத நிலையில் மழையில் நனைந்த விறகுகளை எரிப்பதில் அவதியடைந்தனர். புயலுக்கு பின்னரும் மழை தொடங்கி, அதுவும் தொடர் மழையாக இருப்பதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
 

More from the section

மக்கள் நீதி மய்யம்: மயிலாடுதுறை வேட்பாளர் ரிபாயுதீன்
மக்கள் நீதி மய்ய நாகை வேட்பாளர் க. குருவையா
இருதய கமலநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை
கல்லூரியில் தொழில் முனைவு உணவுத் திருவிழா
கல்யாண ரெங்கநாதப் பெருமாள் திருக்கல்யாணம்