வியாழக்கிழமை 21 மார்ச் 2019

மாநில கபடிப் போட்டியில்  சீனிவாசா பள்ளி மாணவர்கள் சாதனை

DIN | Published: 21st November 2018 09:58 AM

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் பூம்புகார் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். 
கரூரில் 6 முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு மாநில அளவிலான கபடிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், பூம்புகார் - மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் மாணவர்கள் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றனர். 
மாணவர்களின் வெற்றிக்கு துணையாக இருந்த உடற்கல்வி இயக்குநர் சிதம்பரம், ஆசிரியர்கள் பிரபாகரன், பிரவீன்ஆனந்த் மற்றும் மாணவர்களை பள்ளிச் செயலர்  ராஜசேகரன், தலைமையாசிரியர் சத்தியமுர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர். 

More from the section

மக்கள் நீதி மய்யம்: மயிலாடுதுறை வேட்பாளர் ரிபாயுதீன்
மக்கள் நீதி மய்ய நாகை வேட்பாளர் க. குருவையா
இருதய கமலநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை
கல்லூரியில் தொழில் முனைவு உணவுத் திருவிழா
கல்யாண ரெங்கநாதப் பெருமாள் திருக்கல்யாணம்