புதன்கிழமை 23 ஜனவரி 2019

சாரண, சாரணிய ஆசிரியர்கள் சிறப்புக் கூட்டம்

DIN | Published: 11th September 2018 08:18 AM

நாகை வருவாய் மாவட்ட சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம், சீர்காழியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் ஆ.தியாகராஜன் தலைமை வகித்தார். சீர்காழி வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகவன், லெட்சுமி, சாரண, சாரணிய சீர்காழி கல்வி மாவட்டத் தலைவரும், பள்ளி தலைமை ஆசிரியருமான அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் காசி.இளங்கோவன் வரவேற்றார்.
சாரணர் இயக்க மாநிலத் தலைவரும், மெட்ரிக் பள்ளிகளின் முன்னாள் இயக்குநருமான ப.மணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சீர்காழி சாரண கல்வி மாவட்ட இணைய தளத்தை தொடங்கிவைத்து, 30 ஆண்டுகளுக்கு மேல் சாரண இயக்கத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் 8 பேருக்கு பாராட்டுத் தெரிவித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தம், சம்பத்குமார், வரதராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினார். சாரண இயக்க மாவட்டப் பொருளாளர் நா.அசோக்குமார் நன்றி கூறினார்.

More from the section

திட்டச்சேரியில் அமமுக பொதுக்கூட்டம்
பேருந்து மோதி தொழிலாளி பலி
அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றக் கோரிக்கை
இந்திய ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி கருத்தரங்கு