திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

சுருட்டுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 11th September 2018 08:18 AM

கூலி உயர்வு கோரி நாகை மாவட்ட அனைத்து சுருட்டுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுருட்டுத் தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு, சுருட்டுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.எஸ். குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் பாஸ்கரன், துணைச் செயலாளர்கள் சேகர்,  கமாலுதீன், துணைத் தலைவர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
 

More from the section

ஹைட்ரோ கார்பன் திட்டம் கிராமம்தோறும் போராட்டக்குழு அமைக்க முடிவு
வேளாங்கண்ணியில் மரியியல் ஆய்வரங்கம்
கஜா புயல் நிவாரணம் கோரி போராடிய கிராமங்கள்புறக்கணிக்கப்பட்டுள்ளன
வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்
நாகையில் 23, 24-இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம்