புதன்கிழமை 23 ஜனவரி 2019

தோப்புத்துறையில் புதிய நூலகக் கட்டடம் திறப்பு

DIN | Published: 11th September 2018 08:16 AM

நாகை மாவட்டம், வேதாரண்யம் தோப்புத்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோப்புத்துறை ஆரிபீன்படேசாஹிப் தர்கா வளாகத்தில் ஆரிஃபா குழுமத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தின் திறப்பு விழாவுக்கு, துபையில் செயல்படும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தது. விழாவுக்கு முஸ்லிம் ஜமாத் மன்றத் தலைவர் கே.எம்.கே.ஐ. நவாஸ்தீன் தலைமை வகித்தார். தலைமை இமாம் கே.எம். ஷாகுல் ஹமீது பாக்கவி, ஜமாத் செயலாளர் அவுலியா முகம்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலரும், நாகை  சட்டப் பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி, சமூக நீதி அறக்கட்டளை நிறுவனர் சி.எம்.என். சலீம், துபையில் செயல்படும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத் தலைவர் சகாபுதீன், பிரதிநிதி சித்திக், ஜமால் மெய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
நூலகத்துக்கான கட்டடத்தை தனது சொந்த நிதியில் நன்கொடையாக அமைத்துத் தந்த ஆரிஃபா குழுமத் தலைவரும், கல்வியாளருமான எம். சுல்தானுல் ஆரிஃப்பீன், தமிழக அரசின் விருதை பெற்ற அரசு மருத்துவர் ஒய். அக்பர் அலி ஆகியோர் விழாவில் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில், 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் மொஃபிகா, ருவைனா, ரசிமாபேகம் ஆகியோருக்கு முறையே ரூ. 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பரிசாக அளிக்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சம்ரினா ஆஃப்ரின், ஏ. ரசீகாபேகம், ஹாசியா பானு ஆகியோர் முறையே ரூ. 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பரிசு பெற்றனர்.
இதில் நூலக கட்டடப் பொறியாளர் ஆர்.சி. சுப்பிரமணியன், குருகுலம் நிர்வாகி அ. வேதரத்னம், நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க உதவிய எஸ்.எம். முகமது அலி, மகஜூன்அறக்கட்டளையினர் உள்பட 34 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

More from the section

பேருந்து மோதி தொழிலாளி பலி
அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
திட்டச்சேரியில் அமமுக பொதுக்கூட்டம்
இந்திய ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி கருத்தரங்கு
ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு ஒவ்வாமை