செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

வெள்ளத்தால் பாதித்த மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள்: நாகை எஸ்பி சொந்த செலவில் வழங்கினார்

DIN | Published: 11th September 2018 08:16 AM

சீர்காழி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது சொந்த செலவில் நோட்டுப் புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.  கொள்ளிடம் ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில், பாதிக்கப்பட்ட நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, சந்தப்படுகை, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை படித்துகொண்டிருந்த 1020 மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார் தனது சொந்த நிதியிலிருந்து நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அவ்வாறு ஏற்பாடு செய்திருந்த கல்வி உபகரணங்களை கொள்ளிடம் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் போலீஸார் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு  நேரில் சென்று மாணவர்களிடம் வழங்கினர்.

More from the section

திட்டச்சேரியில் அமமுக பொதுக்கூட்டம்
பேருந்து மோதி தொழிலாளி பலி
அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
இந்திய ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி கருத்தரங்கு
ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு ஒவ்வாமை