வியாழக்கிழமை 17 ஜனவரி 2019

கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

DIN | Published: 12th September 2018 06:52 AM

நாகை மாவட்ட திருக்கோயில்களில் காலியாக உள்ள இரவு பாதுகாப்புப் பணிக்குத் தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில், 54 கோயில்களில் இரவு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 58 வயதுக்குள்பட்ட, நல்ல திடகாத்திரமான உடல் நிலை கொண்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.  விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், நாகை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

More from the section

"உழவர் வாழ்வு வளம் பெற வாழ்த்துகள்'
திருவாவடுதுறை ஆதீனம் பொங்கல் வாழ்த்து
மண்பாண்ட பொருள்கள் விற்பனையில் சரிவு
தொகுப்பு வீடுகள் மறு சீரமைப்பு: திட்ட இயக்குநர் ஆய்வு
திருக்கடையூர் எல்கைப் பந்தயத்துக்கு தடைவிதிக்கக் கோரி மனு