வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

தலைஞாயிறில் திறன் மேம்பாடு பயிற்சி

DIN | Published: 12th September 2018 06:50 AM

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறன் மேம்பாடுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாடுப் பயிற்சியில் பெண்கள் உள்பட 225 பேர் பங்கேற்றனர்.  இவர்களில், 129 பேர் தொடர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கே.பிரகாசம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.செல்வராசு, சு.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.சிவகுமார், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ஏ.நஜீமாபேகம், பயிற்றுநர் முகம்மது சலீம், வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

"தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக வந்தேன்'
ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் நெல் மகோத்ஸவம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா ?
நாகை, திருமருகலில் பிப்ரவரி 23 மின் நிறுத்தம்
வேதாரண்யேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா