செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

மாப்படுகையில் ரயில்வே மேம்பாலம் கட்ட இடம் தேர்வு: எம்எல்ஏ ஆய்வு

DIN | Published: 12th September 2018 06:53 AM

மயிலாடுதுறை வட்டம், மாப்படுகை கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள  இடத்தை எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு  செய்தார். 
காவிரிபூம்பட்டினம்- கல்லணை சாலையில் மயிலாடுதுறை வட்டம், மாப்படுகை கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக   நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 76 கோடியில் திட்ட  மதிப்பீடு  தயார் செய்யப்பட்டு, பாலம் கட்டுவதற்கான இடம் தேர்வு மற்றும் முதற்கட்ட ஆய்வுப்  பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இந்நிலையில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும், அதன் அருகே உள்ள 2 கிளை வாய்க்கால்களையும் மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது,  ரயில்வே பொறியாளர் சேகர், பொதுப்பணித் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் பி.செந்தில்குமரன், உதவிப் பொறியாளர் கா. சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More from the section

மயிலாடுதுறையில் ராதா கல்யாண மகோத்ஸவம்
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
காதலர்கள் தூக்கிட்டுத் தற்கொலை
அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி நிறைவு
ருத்ராபதீசுவரர் கோயில் குடமுழுக்கு