திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

DIN | Published: 12th September 2018 06:46 AM

நாகை மாவட்டம், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு வட்டத் தலைவர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். 40 சதவீத ஊனம் உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு ஆணை பிறப்பித்தும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை, நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு 224 நாள்கள் வழங்கப்படாமல் இருக்கும் ஊதியத்தை வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றோருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் முழக்கமிட்டனர்.
இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேசன், நிர்வாகிகள் ஜீவானந்தம், நீலமேகம், நடராஜன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
 

More from the section

வேளாங்கண்ணியில் மரியியல் ஆய்வரங்கம்
கஜா புயல் நிவாரணம் கோரி போராடிய கிராமங்கள்புறக்கணிக்கப்பட்டுள்ளன
ஹைட்ரோ கார்பன் திட்டம் கிராமம்தோறும் போராட்டக்குழு அமைக்க முடிவு
வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்
நாகையில் 23, 24-இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம்