சனிக்கிழமை 23 மார்ச் 2019

நாகை, திருமருகலில் பிப்ரவரி 23 மின் நிறுத்தம்

DIN | Published: 22nd February 2019 08:03 AM

நாகை துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (பிப். 23) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட  செய்திக் குறிப்பு : 
நாகை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி,  நாகை, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் : 
நாகப்பட்டினம் : நாகை,  வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை.
திருமருகல் : திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகலூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.
வேட்டைக்காரனிருப்பு : திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதில் அவர் தெரிவித்துள்ளார். 
 

More from the section


ஏர் கலப்பையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயத் தொழிலாளி

தொகுதி மாறி வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்...!
விவசாயம், மீன்பிடித் தொழில் பாதுகாப்புக்கு நடவடிக்கை: கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு வாக்குறுதி
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற திமுக தமிழகத்துக்காக செய்தது என்ன? அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேள்வி 
பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்