வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு ஒவ்வாமை

DIN | Published: 22nd January 2019 08:01 AM

நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவருந்திய மாணவர்கள் திங்கள்கிழமை ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர் விடுதியில் 50 மாணவர்கள் தங்கியுள்ளனர். இதில், 34 மாணவர்கள் திங்கள்கிழமை  உணவருந்தியுள்ளனர். உணவருந்திய சிலருக்கு திங்கள்கிழமை பிற்பகல் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் திருக்குவளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டனர். இதில், 6 மாணவர்கள் மட்டும் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் புறநோயாளிகளாக முதலுதவி சிகிச்சைப் பெற்று விடுதிக்குத் திரும்பினர்.
அமைச்சர் நலம் விசாரிப்பு: இதுகுறித்துத் தகவலறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் ஆகியோர் திங்கள்கிழமை இரவு திருக்குவளை அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
 

More from the section

"தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக வந்தேன்'
ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் நெல் மகோத்ஸவம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா ?
நாகை, திருமருகலில் பிப்ரவரி 23 மின் நிறுத்தம்
வேதாரண்யேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா