வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

இந்திய ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி கருத்தரங்கு

DIN | Published: 22nd January 2019 08:01 AM

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் இயற்பியல் துறை மாணவர் மன்றம் சார்பில், இந்திய ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், புதுவை தூர்தர்ஷன் கேந்திராவின் துணை இயக்குநர் ஏ. நவநீதம்பெருமாள், முதுநிலை உதவிப் பொறியாளர் எஸ். குருமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, இந்தியாவில் ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் புகைப்படைக் கலை குறித்து விளக்கினர். நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் கே. சிங்காரவேலன் வரவேற்றார். நியூட்டன் பான்ட்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி. பிரபு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் எஸ். ராமலிங்கம் நன்றி கூறினார்.

More from the section

"தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக வந்தேன்'
ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் நெல் மகோத்ஸவம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா ?
நாகை, திருமருகலில் பிப்ரவரி 23 மின் நிறுத்தம்
வேதாரண்யேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா